பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.;

Update:2022-09-16 00:15 IST


சரவணம்பட்டி

கோவை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தார். இதற்காக அவர் அங்குள்ள பஸ் நிலையத்துக்கு வருவது வழக்கம்.

அங்கு அந்த மாணவியை, ஒரு பேக்கரியில் வேலை செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் மகேஸ்வரன் (வயது21) பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினாள். அவர்கள், கொடுத்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்