மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.;
திருமக்கோட்டை அருகே தென்பரையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை ஆசிரியை ராசாத்தி தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கோட்டூர் வட்டார வளம் மைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் பார்வையாளராக கலந்து கொண்டார். இதில் அரசு நடைமுறைகளின் படி தலைவியாக ரம்யா மற்றும் 5 நியமன உறுப்பினர்கள், 15 பெற்றோர் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனோகரன், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை தேவசேனா நன்றி கூறினார்.