வைகோவின் வெற்றி எதில் இருக்கிறது தெரியுமா? வைரமுத்து பதிவு

வைகோவின் நடைப்பயணத்தின்போது தொண்டர்கள் மட்டுமல்ல என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.;

Update:2026-01-13 10:16 IST

சென்னை,

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

நேற்று மதுரையிலிருந்தேன் வைகோவின் சமத்துவ நடைப்பயணநிறைவு விழாவில் கலந்துகொண்டேன் “ஒரு மலையின் அழகுஎதில் இருக்கிறது?அதன் ஒழுங்கற்றஒழுங்கில் இருக்கிறது.ஒரு பறவையின் வெற்றிஎதில் இருக்கிறது?மொத்த வானத்தையும்மறக்கடித்துவிட்டுத் தன்னை மட்டுமே கவனிக்கச் செய்யும் தந்திரத்தில் இருக்கிறதுஅதுபோல் வைகோவின் வெற்றிஎதில் இருக்கிறது?வெற்றிகளையும்தோல்விகளையும்காலடியிலிட்டு மிதித்துக்கடந்துகொண்டேஇருப்பதில் இருக்கிறதுவைகோவின்நடைப்பயணத்தின்போது

தொண்டர்கள் மட்டுமல்ல;சத்தியம் நடந்து வந்தது;லட்சியம் நடந்து வந்தது;தமிழ் நடந்து வந்தது மிச்சமிருக்கும் ஆண்டுகளிலும்அவர் தொடர்பயணத்தில் துணையிருங்கள் தோழர்களே!இந்த நடைப்பயணம் போதைக்கு எதிராகவும் போர் தொடுக்கிறது போதை என்பது உள்ளூர்த் தீமையல்ல;உலகத் தீமை உலகில் 30 கோடி போதை அடிமைகள் உள்ளதாக ஐ.நா அறிவிக்கிறதுதமிழ்நாட்டை விட்டு மது வெளியேறாமல் இருக்கலாம்.ஆனால், மதுவை விட்டுத் தமிழர்களே வெளியேறுங்கள்”என்று பேசினேன். துரை வைகோ எம்.பி வரவேற்றார் நடிகர் சத்யராஜ் வெங்கடேசன் எம்.பிவாழ்த்துரைத்தார்கள் நல்ல கூட்டம்;கண்ணுக்குத் தெரியவில்லை கடைசி மனிதன்"  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்