இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
வரும் 19ம் தேதி விஜய்யை சிபிஐ மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக தலைவர் விஜய்யை மீண்டும் ஜன.19ம் தேதி சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று 7 மணி நேரத்திற்கு மேல் அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது தனி விமானத்தில் சென்னை புறப்பட்டுள்ளார் விஜய்.
பொங்கல் பண்டிகை விடுமுறை.. 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊருக்கு பயணம்
பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றில் மணல் குவாரி திறப்பதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆற்காடு அருகே சக்கரமல்லூரில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரியை தி.மு.க. அரசு உடனடியாக மூட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
நிரந்தர கொரோனாபோல தாக்கும் மத்திய பாஜக அரசு: மு.க.ஸ்டாலின் சாடல்
பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய முன்னணி வீராங்கனை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி (35) அறிவித்துள்ளார். சொந்த மண்ணில் அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடவுள் ராமர் பா.ஜ.க.வில் உறுப்பினராகி விட்டாரா? காங்கிரஸ் எம்.எல்.சி. கேள்வி
அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில், மதத்தின் பெயரால் பா.ஜ.க. வாக்குகளை கோரி வருகின்றனர் என கூறினார்.
மீண்டும் உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,170க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் புதன்கிழமை டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
இந்நிலையில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தலாம்: வெள்ளை மாளிகை
ஈரானுக்கு எதிராக தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள டிரம்ப் பயப்படமாட்டார் என்று லீவிட் கூறினார்.