முக்கூடல்:
பொதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் சூர்யா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கரம்மாள் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சுடலைமணி வரவேற்று பேசினார். பஞ்சாயத்து தலைவர்கள் ராம்சந்துரு (பள்ளக்கால்), கஸ்தூரி (ரெங்கசமுத்திரம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் ஜோசப் கிரகோரி கண்காட்சியை திறந்து வைத்து பேசினார்.
இதில் 120 மாணவர்கள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்து இருந்தனர். இதனை பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தனர். சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜான் பாக்கியசெல்வம் வாழ்த்தி பேசினார்.