மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-01 17:59 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் பயன்பெற உலமாக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற 9-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்