குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றம் - 3 ஆயிரம் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு...!

குளச்சல் சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக 3 ஆயிரம் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

Update: 2022-06-30 06:02 GMT

குளச்சல்,

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மீனவர்கள் வரும் மூன்று நாட்களுக்கு லட்சதீவு மற்றும் கேரளா கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் இன்று குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் மழை பெய்வதோடு கடல் சீற்றமாகவே காணப்படுவதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்