ஆக்கிரமிப்பு கட்டிடத்துக்கு சீல்
ஆக்கிரமிப்பு கட்டிடத்தை மூடி உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் ஊழியர்கள் சீல் வைத்தனர்.;
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் எவை என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கவுண்டம்பாளையம், ஆட்டோ நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 4 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து வர்த்தக கட்டிடம் இயங்கி வருவது தெரியவந்தது.
உடனே உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் ஊழியர்கள் விரைந்து சென்று அந்த கட்டிடத்தை மூடி சீல் வைத்தனர். அந்த கட்டிடம் செயல்பட்ட 4 சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.