பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் காவலாளி பிணமாக மீட்பு; போலீசார் விசாரணை

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் காவலாளி பிணம் மீட்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-11 13:30 GMT

பொன்னேரி அருகே கிருஷ்ணாபுரம் மேட்டு காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 72). இவர் தனது மகன் தேவேந்திரன் (47) என்வருடன் வசித்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுப்பிரமணி காவலாளி மற்றும் பராமரிப்பு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சுப்பிரமணி வேலைக்கு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. எனவே மகன் தேவேந்திரன் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்கவில்லை. பின்னர் சந்தேகத்தின் பேரில் அவர் வேலை செய்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை பார்த்த போது அங்கு சுப்பிரமணி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தேவேந்திரன் பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்த சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் கழிவுநீர் தொட்டியில் விழுந்து முதியவர் எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்