48 மதுபாட்டில்கள் பறிமுதல்
அருப்புக்கோட்டையில் 48 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூக்கடை பஜார் அருகே சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த செய்யது உளி (வயது 50) என்பதும் அப்பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், செய்யதுஉளியை கைது செய்தனர்.