பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பேரையூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-07-23 01:00 IST

பேரையூர்

பேரையூர் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளதா என்று செயல் அலுவலர் ஜெயதாரா மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடை மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்