நெய்வேலியில் உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட வேன் பறிமுதல்

நெய்வேலியில் உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-01 16:18 GMT

நெய்வேலி,

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் உத்தரவின் பேரில் நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ், நெய்வேலி நகருக்குள் வரும் பள்ளி கல்லூரி வாகனங்கள் தகுதி சான்று, காப்பீடு, ஓட்டுநர் உரிமம், உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தகுதி சான்று உள்ளிட்ட ஆவணம் இல்லாத வேன் ஒன்றை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் பறிமுதல் செய்தார். மேலும் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்