விருத்தாசலத்தில்ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு220 சாரண- சாரணியர்கள் பங்கேற்பு
விருத்தாசலத்தில் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு நடைபெற்றது.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்நாடு பாரத சாரண-சாரணியர் படை இயங்கி வருகிறது. இந்த படையில் சிறப்பாக சேவையாற்றும் சாரணர் மற்றும் சாரணியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று, ராஜ்ய புரஸ்கார் விருதினை தமிழக கவர்னர் வழங்கி கவுரவிப்பார்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான சிறந்த சாரண-சாரணியர்களை தேர்ந்தெடுக்கும் ராஜ்ய புரஸ்கார் விருது தேர்வு முகாம் விருத்தாசலம் சாரதா வித்யாலயா பள்ளியில் நடந்தது. தொடர்ந்து மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் வீரப்பா, முகாம் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 220 சாரண- சாரணியர் படை மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.