மாநில அளவிலான செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

மாநில அளவிலான செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது.

Update: 2023-10-07 17:13 GMT

அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான செஸ் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் இப்போட்டியில் வருவாய் குறுவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். 72 மாணவர்கள், 72 மாணவிகள் என மொத்தம் 144 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறும் மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்பார்கள். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தலைமையில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் மேற்பார்வையில், உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்