எடப்பாடி பகுதியில் தொடர் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது கண்காணிப்பு கேமரா காட்சியால் அம்பலம்

எடப்பாடி பகுதியில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்தது. மூகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது கண்காணிப்பு கேமரா காட்சியால் அம்பலமாகி உள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.;

Update:2022-07-29 04:16 IST

எடப்பாடி:

தொடர் கொள்ளை

எடப்பாடி அருகே காவான்காடு பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரது வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள், வீட்டுக்கதவை உடைத்து அங்கிருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை திருடி சென்றனர். இதேபோன்று எடப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் முகமூடி அணிந்து கைவரிசை காட்டி வந்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

திருட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதாவது தனிப்படை அமைத்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பகுதியில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மூகமூடி அணிந்து...

அந்த கேமராக்களில் மூகமூடி அணிந்தபடி 2 பேர் நடமாடியது பதிவாகி உள்ளது. அந்த காட்சியில், கொள்ளையர்கள் 2 பேரும் 'டவுசர்' அணிந்துள்ளனர். சட்டை எதுவும் அணியவில்லை. இதனை பதிவு செய்த போலீசார் அந்த 2 பேர் யார் என்பது குறித்து அடையாளம் காண முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கொள்ளையர்கள் உருவத்தை கொண்டு போலீசார் அவர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்