கழிவுநீர் ஓடை பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு
பாளையங்கோட்டையில் கழிவுநீர் ஓடை பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.;
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7-வது வார்டு மனக்ககாவலன் பிள்ளை நகரில் கழிவுநீர் ஓடை அமைப்பது குறித்தும், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் குறித்தும், 36-வது வார்டு காமராஜர் நகரில் நடைபெற்று வரும் கழிவுநீர் ஓடை, சிறிய கல்வெட்டு பாலம் ஆகிய பணிகளை அப்துல் வகாப் எம்.எம்.ஏ. ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், 36-வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய், மாநகர துணை செயலாளர் மூளிகுளம்பிரபு, மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஜெய் கணபதி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.