மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-30 18:45 GMT

காரைக்குடி,

காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணை நேற்று முன்தினம் காணவில்லை என அவரது தாய் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். இதற்கிடையே நள்ளிரவில் அந்த பெண் வீட்டுக்கு வந்துள்ளார். அதுகுறித்து பெண்ணின் தாய் விசாரித்த போது 2 பேர் தன்னை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்ததாக காரைக்குடியை சேர்ந்த கார்த்திகேயன் (22), அப்துல்ரகுமான் (22) ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்