சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-29 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே சவேரியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜீவா (வயது 22). இவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது பற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அந்தோணிஜீவாவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்