ஜேடர்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Update:2022-12-15 00:15 IST

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்