சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்

சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்

Update: 2023-03-08 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன்புதூர் அரசு சித்த மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு சித்த மருத்துவம், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், பாரம்பரிய அரிசி ரகங்களின் மருத்துவ பயன்கள், உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்கள் எவ்வாறு பங்கு வகிக்கிறது,

மகளிர் நல்வாழ்விற்கான மூலிகைகள், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் அரசு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்கள், யோகா மற்றும் தியானம், மலைவாழ் மக்கள் சேகரிக்கும் மூலிகை பொருட்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் உள்ள திருமூலர் மூலிகைப்பண்ணையில் உள்ள மூலிகைகளை இனம் கண்டறிதல் பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் சித்த மருத்துவத்தின் வரலாறு, தமிழர்களின் வாழ்வியலுக்கும், சித்த மருத்துவத்திற்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றி சித்த மருத்துவர் நல்லதம்பி எடுத்துரைத்தார். இதில் மாணவிகளுக்கு ஏலாதி சூரணம், வில்வாதி இளகம் ஆகிய சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்