கல்லூரியில் கையெழுத்து இயக்கம்: வக்கீல் சகோதரிகள் கைது- மதுரை போலீசார் நடவடிக்கை

கல்லூரியில் கையெழுத்து இயக்கம் நடத்திய வக்கீல் சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-05 03:06 IST


மதுரையை சேர்ந்த வக்கீல் சகோதரிகளான நந்தினி, நிரஞ்சா ஆகியோர் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும், டாஸ்மாக் உள்பட தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்களையும் தடை செய்ய வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தடை செய்து மற்ற நாடுகளைப் போல வாக்குச்சீட்டில் நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று ஒரு கல்லூரியில் மாணவர்களிடம் இதுகுறித்து கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்திய அவர்களை தல்லாகுளம் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்