அரசு விடுதி மாணவிகளுக்கு சிலம்பாட்டம் பயிற்சி
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை அரசு மாணவிகள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது.;
தளி,
பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக இலவச சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டும் சிலம்ப ஆசிரியர் வீரமணி பயிற்சி அளித்தார். உடுமலை கிளை நூலகம் வாசகர் வட்ட தலைவர் இளமுருகு பணி, நிறைவு நூலகர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதியில் தங்கி படிக்கும் 75 மாணவிகள் பயிற்சி பெற்றனர். பயிற்சியை விடுதி காப்பாளர் ஹேமா தொடங்கி வைத்தார். வாரம் 2 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் மாணவிகளுக்கு தகுதி தேர்வு வைக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும் என்று சிலம்ப ஆசிரியர் தெரிவித்தார்.