அனைத்து படிப்புகளுக்கும் ஒரே நுழைவு தேர்வு - மத்திய கல்வித்துறை இணை மந்திரி
அனைத்து படிப்புகளுக்கும் ஒரே நுழைவு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.;
மத்திய மந்திரி வருகை
மத்திய கல்வித்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் காஞ்சீபுரம் வருகை தந்தார். காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற அவர் அம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனையடுத்து வெள்ளை கேட் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவ-மாணவிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:-
நீட் தேர்வு தேசத்தின் பொதுவான நுழைவுத்தேர்வு, இது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும்.
ஒரே நுழைவுத்தேர்வு
நுழைவுத்தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் பல்வேறு படிப்புகளுக்கு பல்வேறு கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க வேண்டும், இதன் விளைவாக விண்ணப்ப செலவுக்கு மட்டுமே பெரும் பணம் செலவாகும். மாணவர்கள் பல நுழைவு தேர்வுகளை எழுதாமல் இருக்க அனைத்து படிப்புகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வை நடத்த அரசு யோசித்து வருகிறது.
தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ மத்திய அரசு அறிவித்தது.
புதிய கல்வி கொள்கை மாணவர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.