சிவகிரி புலிப்பாணி சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை

சிவகிரி புலிப்பாணி சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது;

Update:2023-10-18 03:48 IST

சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே சுனைக்குன்றின் மேல் 18 சித்தர்களில் ஒருவரான புலிப்பாணிசித்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குருபூஜை மற்றும் பவுர்ணமி, அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரம் புலிப்பாணி சித்தரின் ஜென்மநட்சத்திரம் என்பதால் இந்த கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி புலிப்பாணி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்