பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் அவதூறு

விழுப்புரத்தில பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்ட நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update:2023-09-18 00:15 IST

தமிழகத்தில் நேற்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்தநிலையில் விழுப்புரம் திரு.வி.க.ரோட்டில் உள்ள தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தி விட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நேற்று நடந்தது போல் சிலர் சமூக வலைத்தளங்களில் உள் நோக்கத்துடன் பரப்பி உள்ளனர். பின்னர் இது குறித்து புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் பழைய செய்திகளை தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும், அப்படி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்