நகைச்சுவை நடிகர் கோவை குணாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் அஞ்சலி

நகைச்சுவை நடிகர் கோவை குணாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.;

Update:2023-03-23 00:15 IST

சரவணம்பட்டி,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா (வயது 54). இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து உள்ளார். கோவை குணா விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி ஜூலி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கோவை குணா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்படடு மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் கோவை விளாங்குறிச்சியில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் ஈரோடு மகேஷ் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் கலந்துகொண்டு ேகாவை குணா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்