சரக்கு வேனில் 2½ டன் ரேஷன் அரிசி கடத்தல்

சரக்கு வேனில் 2½ டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது.

Update: 2022-12-09 19:27 GMT

மணப்பாறையை அடுத்த கொட்டபட்டி பிரிவு சாலையில் வட்ட வழங்கல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அதிகாரிகள் ரோந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளை கண்டதும் சரக்கு வேனில் வந்தவர்கள் வேனை நிறுத்தி விட்டு இறங்கி ஓடிவிட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் சரக்கு வேனில் சோதனை நடத்தியதில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக திருச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வந்து, வேனில் இருந்த 2½ டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். மேலும் தொப்பம்பட்டியை சேர்ந்த ஒருவர் கடத்தி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்