2 கடை, வீட்டில் பாம்புகள் புகுந்ததால் பரபரப்பு

தர்மபுரி பகுதியில் 2 கடை, வீட்டில் பாம்புகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-07-09 21:47 IST

தர்மபுரி அருகே உள்ள உங்கரானஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய வீட்டில் நேற்று ஒரு நல்ல பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் அந்த பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதேபோல் ஜெட்டிஅள்ளி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்குள் பாம்பு புகுந்தது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று கடைக்குள் இருந்த பாம்பை பிடித்தனர். இதேபோல் தர்மபுரி எஸ். வி.ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சாரை பாம்பு புகுந்தது. தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு படையினர் அங்கு சென்று பாம்பை பிடித்தனர். கடைகள், வீட்டில் பாம்பு புகுந்ததால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்