தொழில் அதிபரை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் - 6 பேர் கைது

தீவிர தேடுதல் வேட்டையில் தொழில் அதிபரையும், அவருடைய நண்பரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.;

Update:2025-12-15 21:50 IST

ராஞ்சி,

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரு முகர்ஜி (வயது 65). தொழில் அதிபரான இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் தில்மி பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றார். இந்தநிலையில் அவரையும் அவரது நண்பரையும் மர்ம நபர்கள் கடத்திச் சென்று ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் காரர்களை தேடிவந்தனர்.

தீவிர தேடுதல் வேட்டையில் தொழில் அதிபரையும், அவருடைய நண்பரையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்