திண்டுக்கல்: ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயம்
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இந்நிலையில், வேடசந்தூர் அருகே முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.