லாரியில் சரள் மண் கடத்தியவர் கைது
சரள் மண் கடத்தியவர் கைது-லாரியை பறிமுதல் செய்தனர்;
நெல்லை:லாரியில் சரள் மண் கடத்தியவர் கைது
பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசார், நெல்லை- கன்னியாகுமரி நாற்கரசாலையில் மேம்பாலத்தின்கீழ் சிவந்திபட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் உரிய அனுமதியின்றி சரள் மண்ணை லாரியில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரான பாளையங்கோட்டை அருகே நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த ஐகோர்ட் ராஜாவை (வயது 42) போலீசார் கைது செய்து, சரள் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிவந்திபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டனை தேடி வருகின்றனர்.