திடக்கழிவு மேலாண்மை திட்ட கருத்தரங்கம்
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.;
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை கலெக்டர் வளர்மதி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
மேலும் மழை நீர் சேகரிப்பு மாதிரி இல்லமும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேசன், பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், துணைத்தலைவர் தீபிகா முருகன், செயல் அலுவலர் சரவணன், பல்ராம் மெமோரியல் டிரஸ்ட் பொருளாளர் சுந்தர், விளாப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் முத்து மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.