தந்தையை தாக்கிய மகன் கைது

விளாத்திகுளத்தில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-06-06 20:43 IST

எட்டயபுரம்:

விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் தங்கராஜ். இவர் தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தற்போது 2-வது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்றுகாலை 11 மணி அளவில் முதல் மனைவியான சண்முக லட்சுமி மற்றும் அவரது‌மகன் பிரேம் குமார் ஆகிய இருவரும் தங்கராஜ் வீட்டிற்கு சென்று சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்து தாக்கினர். இதில் காயமடைந்த தங்கராஜ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன் பிரேம்குமாரை கைதுத செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்