நல வாரிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

செலக்கரிச்சலில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெற்றது;

Update:2022-06-24 22:15 IST

சுல்தான்பேட்டை

செலக்கரிச்சலில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

சிறப்பு முகாம்

பொள்ளாச்சியை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், தினக்கூலி பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

இதற்கு, செலக்கரிச்சல் நில வருவாய் முருகப்பெருமாள் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ்பாபு, சிலம்ப ரசன் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு

செலக்கரிச்சல் நில வருவாய் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 60 பேருக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்க ஆன்லைனில் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது குறித்து வருவாய்துறையினர் கூறியதாவது:-

சமூக பாதுகாப்பு

ஆன்லைனில் பதிவு செய்வதன் மூலம் தேசிய அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நிரந்தர பதிவு எண் கொண்ட அடையாள அட்டை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

விபத்து காப்பீடு பி.எம்.எஸ்.பி.ஒய் என்ற இத்திட்டத்தின் கீழ் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

விபத்து மரணம், முழு உடல் ஊனம் ஆகியவற்றுக்கு ரூ.2 லட்சம், பகுதியளவு ஊனத்திற்கு ரூ.1 லட்சம், சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயன்களை நேரடியாக பெற முடியும்.

இதில் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களின் ஆதார் எண், அலைபேசி எண், வங்கி புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்