தாமிரபரணி ஆற்றில் சிறப்பு தீப ஆரத்தி

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் சிறப்பு தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது.;

Update:2023-05-17 01:44 IST

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதி ஆன்மீக நதியாகவும் திகழ்கிறது. குறிப்பாக பாபநாசம் பாபநாசர் கோவில் முன் பாய்ந்தோடும் தாமிரபரணி நதியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்த தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மகா புஷ்கரணி விழா கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றது. இதனை அகில பாரத துறவியர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பாபநாசத்திற்கு அகில பாரத துறவியர்கள் சங்க நிறுவனர் ஸ்ரீராமானந்த சுவாமிகள் வருகை தந்தார். இதையொட்டி பாபநாசம் கோவில் படித்துறையில் சிறப்பு தீப ஆரத்தி விழா நடைபெற்றது. அப்போது மஞ்சள், குங்குமம், பால் உள்ளிட்டவற்றால் தாமிபரணி நதியை வழிபட்டு அபிஷேகம் செய்து மலர் தூவி சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை புஷ்கரணி ஒருங்கிணைப்பாளர் திருப்பதி ராஜா செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்