குமரமுருகன் மலைக்கோவிலில் சிறப்பு பூஜை

சோளிங்கர் அருகே குமரமுருகன் மலைக்கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.;

Update:2023-09-05 23:47 IST

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள குமரமுருகன் மலைக்கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர், உற்சவர் குமரமுருகன் சாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாலை உற்சவ மூர்த்தி கோவில் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்