நெல்மணிகளை பரப்பி கோவிலில் சிறப்பு பூஜை

வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நெல்மணிகளை பரப்பி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது

Update: 2023-02-15 20:23 GMT

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டு வரும் மார்ச் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக கோவிலில் புதிதாக அமைக்கப்பட உள்ள விநாயகர், முருகன், பிரம்மா சூரியன் உள்ளிட்ட விக்கிரகங்களுக்கு ஆகம விதிப்படி முதல் கட்டமாக தானியவாசம் நேற்று நடந்தது. இந்த பூஜையையொட்டி நெல்மணிகளை சிலைகள் முன்பு பரப்பி வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்