மார்கழி மாத அமாவாசையையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் மார்கழி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2022-12-24 00:15 IST

ஐந்து முனியப்பன் கோவில்

நாமக்கல் மாவட்டத்தில் மார்கழி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி வெண்ணந்தூர் பஸ் நிறுத்தம் அருகே ஐந்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் மூலவர் முனியப்ப சாமிக்கு மார்கழி மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

சிறப்பு அலங்காரம்

இதேபோல் மோகனூர் பகுதிகளில் மார்கழி மாத அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையையொட்டி அசலதீபேஸ்வரர் கோவில், வெங்கட்ரமண பெருமாள் கோவில், காந்தமலை முருகன் கோவில், நாவலடியான் கோவில், காளியம்மன் கோவில், சுண்டக்காய் செல்லாண்டியம்மன் கோவில், ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோவில், எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கோவில்களில் உள்ள சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சவுடேஸ்வரி அம்மன்

குமாரபாளையம் சேலம் மெயின் ரோடு தமிழக செட்டியார் வீதி பிரிவில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மனுக்கு நேற்று மார்கழி அமாவாசையையொட்டி புது புடவை அணிவிக்கப்பட்டு மலர்களால் ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர்் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனையொட்டி அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்