காலபைரவருக்கு சிறப்பு பூஜை

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2023-03-16 00:15 IST

எட்டயபுரம்:

மாசி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், சீயக்காய், இளநீர், பச்சரிசி, தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காலபைரவருக்கு பூ, எலுமிச்சை, செவ்வரளி, வில்வஇலை, வடை உள்ளிட்டவைகளால் மாலை சாற்றி சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் விளாத்திகுளத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தும், விளக்கேற்றியும் வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்