சட்ட விரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சிறப்பு பரிசு

சட்ட விரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.;

Update:2023-05-16 00:59 IST

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக போலி மதுபானங்களை விற்பனை செய்தல், மணல் திருடுதல், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள், லாட்டரி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், மேலும் உங்கள் பகுதியில் நடைபெறும் திருட்டு, திருட்டில் ஈடுபட்ட நபர்கள் பற்றிய தகவல்கள், உங்கள் பகுதியில் யாரேனும் சந்தேகப்படும் வகையில் புதியதாக இருக்கும் நபர்கள் குறித்து, பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். இந்த தகவலை தெரிவிக்க 9498100690 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தங்களது இரகசியம் காக்கப்படும். உண்மையான தகவலை அதிகப்படியான முறை கொடுக்கும் நபர்களுக்கு, தாங்கள் சொன்ன தகவலின் உண்மை தன்மை அறிந்து சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்