கோவிலில் சிறப்பு வழிபாடு

கழுகுமலை சீனிவாச சரவண பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-10-16 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான சீனிவாச சரவண பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 10.30 மணிக்கு பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கழுகாசலமூர்த்தி கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்