சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பிரதோஷத்தைெயாட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-08-28 23:30 GMT

பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தைெயாட்டி நேற்று, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோவிலில் உள்ள நந்தி மற்றும் கொடிமரத்துக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி 3 முறை வலம் வருதல் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவில், திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழனி

பழனி பெரியாவுடையார் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சிவபெருமானுக்கு மற்றும் நந்திக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழனி மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பட்டத்து விநாயகர் கோவில், தட்டான்குளம் சிவன் கோவில், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில், கள்ளிமந்தையம் அருகே உள்ள கூத்தம்பூண்டி மார்க்கண்டேஸ்வரர் கோவில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்