திருச்சி: துறையூர் அருகே தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

தாழ்வாக பறந்த விமானம் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.;

Update:2025-12-20 20:20 IST

திருச்சி,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இன்று சிறிய ரக விமானம் ஒன்று குறைந்த உயரத்தில் தாழ்வாக பறந்து கொண்டிருந்தது. விமானத்தின் சத்தம் கேட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அந்த விமானம் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, சம்பந்தப்பட்ட விமானம் தொடர்பாக தங்களுக்கு எந்த வித தகவலும் வரவில்லை என தெரிவித்தனர். அந்த விமானம் எங்கிருந்து வந்தது? எந்த நோக்கத்திற்காக தாழ்வாக பறந்து சென்றது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்