கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு
ஏமப்பேர் சிவன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை ஜென்மாஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து ஆவாகனம் செய்து கணபதியாகம், கால பைரவர் மூமந்திரயாகம் நடைபெற்றது. பின்னர் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து 108 வடமாலை சாற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர். பூஜைகளை அர்ச்சகர் கணேசன் செய்தார்.