சிறுதானியங்கள் குறித்த பேச்சு, கட்டுரை போட்டி

கம்பம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை சார்பில், பள்ளி மாணவிகளுக்கு சிறுதானியங்கள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன.;

Update:2023-09-15 03:45 IST

தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சிறுதானியங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுபோட்டி, கட்டுரை போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ராகவன் ஆகியோர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலருக்கு உத்தரவிட்டனர். அதன்படி, கம்பம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை சார்பில், கம்பம் ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு சிறுதானியங்கள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பின்னர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கம்பம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மணிமாறன் பரிசுகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்