மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

நெல்லை பழையபேட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.;

Update:2022-12-03 02:54 IST

பேட்டை:

நெல்லை நகர் வளமைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன. பழைய பேட்டை மாநகராட்சி பள்ளியில் வைத்து 40-க்கும் மேற்பட்ட வள மைய மாணவர்களுக்கு போட்டிகள் நடந்தன. வட்டார வள மேற்பார்வையாளர் செண்பகாதேவி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் அன்னை சிவகாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை பெல்சிபாய் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்