முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவருடைய இல்லத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.;
கோப்புப்படம்
சென்னை,
உலகம் முழுவதும் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு பிரபல கோவில்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், புத்தாண்டை கொண்டாடும் வகையில், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். இவ்வாறு, அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, ரகுபதி, பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன் , சேகர்பாபு, நாசர், அன்பில்மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அத்துடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவருடைய ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.