சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் இன்று முதல் விருத்தாசலத்தில் நிற்கும்
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நிறுத்தம் அளிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெல்லை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் ஜனவரி 1-ந் தேதி (இன்று) முதல் பரிசார்த்த முறையில் விருத்தாசலத்தில் 2 நிமிடம் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, நெல்லையில் இருந்து சென்னை வரும்போது காலை 11.08 முதல் 11.10 வரையும், சென்னையில் இருந்து நெல்லை திரும்பும்போது மாலை 5.32 முதல் 5.34 வரையும் விருத்தாசலத்தில் நிற்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது