புனித பிலிப்பு நேரியார் ஆலய தேர் பவனி

புனித பிலிப்பு நேரியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.

Update: 2023-05-27 18:38 GMT

விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் புனித பிலிப்பு நேரியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பிலிப்பு நேரியார் பிறந்த தினத்தை 3 நாட்கள் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பிலிப்பு நேரியார் பிறந்த தினத்தையொட்டி நேற்று முன்தினம் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று தேர் பவனி நடைபெற்றது. பிலிப்பு நேரியார் ஆலயத்தில் தொடங்கிய தேர் பவனியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் கடைசி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்