புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி
புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.;
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் 124-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. கடந்த 1-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக புத்தூர் பங்குதந்தை பாஸ்கர் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் இரவு 8.30 மணியளவில் மலர் மாலைகள், தோரணங்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செபஸ்தியார் மற்றும் மாதா சொரூபங்கள் பொருத்தப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 11 மணியளவில் நிலையை அடைந்தது. விழாவில் புத்தூர் வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ரஞ்சித்குமார், ஜான்போஸ் விழா கமிட்டியினர் மற்றும் புத்தூர் வண்ணாரப்பேட்டை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.